அச்சம் தவிர்
உன்னிடமுள்ள பயத்தை நீக்கிவிடு 

ஆண்மை தவறேல்
வீரத்தைக் கைவிடக்கூடாது.

இளைத்தல் இகழ்ச்சி 
மனம் தளர்ச்சியடைதல் தாழ்வைத் தரும் 

ஈகை திறன்
வறியவருக்குக் கொடுப்பதே உயர்ந்த குணமாகும்.

உடலினை உறுதி செய்
உடலை வலிமையாக்குக.

ஊன் மிக விரும்பு
உணவை மிகவும் விருப்பத்துடன் உண்க

எண்ணுவது உயர்வு
உயர்வைத் தருகின்ற எண்ணங்களையே நினைப்பாயாக. 

ஏறுபோல் நட
ஆண் சிங்கத்தை போல் நிமிர்ந்து நடக்க வேண்டும்..

ஐம்பொறி ஆட்சி கொள்
மெய் வாய் கண் காது மூக்கு ஆகிய ஐந்து உறுப்புகளையும் கட்டுப்படுத்துக.

ஒற்றுமை வலிமையாம்
ஒற்றுமையாக வாழ்வதே வலிமையை உண்டாக்கும்..

ஓய்தல் ஒழி
சோம்பலை நீக்கி விடுக.

ஒளடதம் குறை.
மருந்து உண்பதைக் குறைத்துக் கொள்..

மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்..
ரௌத்திரம் பழகு